Tuesday, May 26, 2015

ஆவூர் இஸ்லாமிய நல உதவி அறக்கட்டளையின் முப்பெரும் விழா!


24-05-2015 அன்று, ஆவூர் இஸ்லாமிய நல உதவி அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.

நாகூர் ஹனீபா ஆவணப்பட பதிவு - ராதாரவியை சந்தித்தேன்..




நாகூர் ஹனீபா ஆவணப்பட பதிவுக்காக நடிகர் ராதாரவியை சந்தித்தேன். ஹனீபா குறித்த தம் நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். ராதாரவியின் தந்தையார் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்க விரும்பியவர் ஹனீபா என்பது முக்கியமான வரலாற்றுச் செய்தி.
ஒருமுறை நாகப்பட்டினத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சந்தித்த ஹனீபா, அவரிடம் பாட்டுப்பாடி நடித்துக் காட்டினார். ஹனீபாவின் கலை ஆர்வத்தைக் கண்டு வியந்த எம்.ஆர்.ராதா, மறுநாளே நாடகக் குழுவில் வந்து சேர்ந்துவிடும்படி சொல்லிவிட்டார். ஹனீபாவும் வீட்டுக்குத் தெரியாமல் வந்து நாடகக் குழுவில் இணைந்துவிட்டார். மகனைக் காணாமல் தாய் வாடுவதைக் கண்டு கலங்கிய ஹனீபாவின் அண்ணன், தம்பியைத் தேடியலைந்து ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டார். அம்மாவின் மீதான அன்பால் அன்று நாடகக் குழுவிலிருந்து பிரியா விடைபெற்றார் ஹனீபா. எனினும் நாடகத்தின் மீதான அவரது காதல் தொடர்ந்தது.
புலவர் ஆபிதீன் எழுதிய பணம் என்ற நாடகம் 1950-இல் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது. அந்த நாடகத்தில், ஒரு கவிஞராக நடித்தார் ஹனீபா. 1953-இல் தேனியில், அண்ணா எழுதிய ‘கல் சுமந்த கசடர்கள்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது. அதில் போர் வீரனாக நடித்தார் ஹனீபா.

காயிதே மில்லத் ஆவணப்பட அறிமுக விழா!





ரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் 10-05-2015 அன்று காயிதே மில்லத் ஆவணப்பட அறிமுக விழாவும் திரையிடலும் நடைபெற்றது. காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிமணி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இசைமுரசு நாகூர் ஹனீபா - ஆவணம்!


சைமுரசு நாகூர் ஹனீபா அவர்களை கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்துள்ளேன். 2004-ஆம் ஆண்டில் வின் டிவியில் அரைமணி நேரம் அவரது வரலாற்றை காட்சிப் படுத்தினேன். அதன் பின்னர் 2010-இல் நாகூர் சென்று அவரை முழுமையான பேட்டி எடுத்து வீடியோ பதிவு செய்தேன். 2012-இல் அவரது 87-வயதின்போது சமநிலைச் சமுதாயம் இதழில் 'நாகூர் ஹனீபா 87' எனும் கட்டுரையை எழுதினேன். ஹனீபாவைப் பற்றி தமிழில் முழுமையாகச் செய்யப்பட்ட முதல் ஆய்வாக அது அமைந்தது.
2014 டிசம்பரில் அவருக்கு 90 வயது நிறைவையொட்டி - அவரைப் பற்றிய ஆவண நூலும், படமும் கொண்டுவர எண்ணி அதற்கான வேலைகளைத் தொடங்கினேன். அதற்காகவே அவரை கடந்த பெருநாள் அன்று நேரிலும் சந்தித்து உரையாடினேன். வேலைகள் பெரும்பகுதி முடிந்து வந்த நிலையில், அவரது மரணம் முந்திக் கொண்டது. அவரது நினைவாக, இந்த மாதம் சமநிலைச் சமுதாயம் இதழில் 'நாகூர் ஹனீபா -90' கட்டுரையை எழுதியுள்ளேன். இதழ் முழுவதும் ஹனீபா குறித்த தகவல்களைத் தொகுத்துள்ளேன். ஹனீபா சிறப்பிதழாகவே இம்மாத இதழ் வெளிவந்துள்ளது. படித்துவிட்டு பலரும் நெகிழ்ந்து பேசுகின்றனர். கடந்த 15 நாட்களாக பல்வேறு பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு முழுமையான நேரத்தை ஒதுக்கி அந்த இதழை தயாரித்தேன். இசைமுரசின் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்திய மன நிறைவுடன் உள்ளேன். நீங்களும் சமநிலைச் சமுதாயம் இதழை வாங்கிப் படியுங்கள். (தொடர்புக்கு: ஜாபர் சாதிக் பாக்கவி - 9840277450).
விரைவில் அரிய தகவல்களுடன் ஆவண நூலும், அரிய காட்சிகளுடன் ஆவணப் படமும் உங்கள் கைகளில் தவழும். நாகூர் ஹனீபா தொடர்பான தகவல்கள் புகைப்படங்கள் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். (ஆளூர் ஷாநவாஸ் - 9884325998)